ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசுடன் இணைகிறார்

க்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில், தொடர்ச்சியாக கட்சி தாவல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

அரசாங்கத்திலிருந்து இதுவரையின் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிரணியில் இணைந்துள்ளனர். இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போதும், அரசாங்கத்திலிருந்து மேலும் பல உறுப்பினர்கள் எதிரணியோடு இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
<தமிழ்மீடியா>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :