சாய்ந்தமருது சிறுவர்கள் கவலைப்பட வேண்டாம்- ஹரீஸ் MP


எஸ்.எம்.அறூஸ்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கல்முனை மாநகர சபைக்கு முன்னாள் மேயர் சிராஸ் காலத்தில் 167 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக முன்னாள் மேயரும் பொறியியலாளர்களும் சேர்ந்து சகல அம்சங்களுக்குரிய சிறுவர் பொழுது போக்கு விளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கியதாக முழுமையான கடற்கரை சிறுவர் பூங்கா அமைக்கப்படுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் கடற்கரை சிறுவர் பூங்கா வேலைகளை நான் ஆரம்பித்து வைத்தேன்.

அந்த வேலைகள் சம்பந்தமாக அன்று தடங்கள்கள் ஏற்பட்டபோது நான் தலையிட்டு மாநகர சபையின் நிர்வாகத்துடன் இணைந்து பீச் பார்க் அமைக்கும் வேலைகளுக்கு முழு உதவிகளையும் செய்து கொடுத்தேன்.

இந்த அடிப்படையில் இன்று திறக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா தொடர்பாக சில விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதில் முக்கியமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைபடத்தில் இருந்த சிறுவர் விளையாட்டுப் பகுதி முற்று முழுதாக செய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய அம்சங்கள் நிறைவடையாமலும் அவசரமாக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சிறுவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத விடயத்தை பிரதேச நலன் விரும்பிகள் தொடர்பு கொண்டு என்னிடம் முறையிட்டனர்.

எனவே, கடும் எதிர்பார்ப்பில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு அதிரடி நடவடிக்கையாக வெலிவேறியன் பிரதேசத்தில் சிறுவர் விளையாட்டு தொகுதிகளை உள்ளடக்கிய முழுமையான சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளேன்.

அதற்கான சகல வேலைகளையும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் செய்து முடித்து சிறுவர்களின் எதிர்பார்ப்புக்களையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு விரும்பியுள்ளேன்.

இந்த விடயம் சம்பந்தமாக ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திடட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :