பொத்துவில் பிரதேசத்தில் தொடர்சியாக திட்டமிடப்பட்டு காணிகள் சுவிகரிக்கப்படும் நடவடிக்கையினை கை விட வேண்டும் என பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையின் முன்னாள் செயலாளர் மௌலவி ஏ.முகைதீன்பாவா இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது
கிரான் கோவைப்பகுதியில் முஸ்லிம்களால் ஆண்டாண்டு காலமாக செய்கை பண்ணப்பட்டு வந்த 502 ஏக்கர் காணி மாத்திரமன்றி அண்மையில் கெடஓயா நாவலாறு பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்களால் செய்கை பண்ணப்பட்டு வந்த மேட்டுப் பயிர்ச் செய்கைக் காணிகளும் அதற்குரிய நீர்ப்பாசன குளமும் வன இலாகா திணைக்கள அதிகாரிகளினால் எல்லையிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற பொத்துவில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதே போன்றுதான் செங்காமப் பகுதி வயல் காணிகளும் சுவிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பல அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் பயனளிக்கவில்லை என்பது மன வேதனையளிக்கின்றது. என்று குறிப்பிட்டார்.
.jpg)
0 comments :
Post a Comment