மட்டக்களப்பு வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி திறந்து வைக்கப்பட்டது




த.நவோஜ்-

ட்டக்களப்பு வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கத்தினால் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண வீதி அமைச்சின் 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினால் புனரமைப்பு செய்யப்பட்ட வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வினை வந்தாறுமூலை மேற்கு பொதுமக்கள் சார்பில் ஊர் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பலகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இவ்வீதியினை மாகாண சபை உறுப்பினர் மிககவனம் எடுத்து அதனைப் புனரமைத்துக் கொடுப்பதற்குரிய காரியங்களை மேற்கொண்டமையை ஊர் மக்கள் மிகவும் வரவேற்று அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக இந்நிகழ்வினை மேற்கொண்டதாக விழாவினை ஏற்பாடு செய்தோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :