உலகெங்கும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் ஊடாக உலகை வெல்ல வேண்டும்' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை செவ்வனே நிறைவேற்றி, இன்று தமது குடும்பங்களோடு தியாகத்திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கம் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இதயங் கனிவான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் ஹஜ் எமக்குக் கற்றுத்தந்த தியாக வரலாற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.
நபி இப்றாகீம் ( அலை), நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் இறை நம்பிக்கை, மனஉறுதி, தியாகம், பொறுமை, சஹிப்புத் தன்மை ஆகியவற்றை நம் வாழ்விலும் கைக் கொள்வோமாயின் வெற்றி நிட்சயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment