அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்துக்கள்-சியாம்டீன்

இக்பால் அலி -

தியாகங்கள் பொதிந்த ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்துக்களைத் தெரிவிப்பதாக சியாம்டீன் பவுண்டேன்ஷன் அமைப்பின் தலைவரும் கண்டி சமூக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பிப்பின் தலைவருமான எஸ். எச். எம் சியாம்டீன் தெரிவித்தார்.

அவர் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள பெருநாள் வாழத்துச் செய்தியில் மேலும் தெவிக்கையில்
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று ஹஜ்ஜின் நோக்கங்கள், அதன் இலட்சியங்கள், தத்தவங்கள் மற்றும் அதன் பண்புகள் என்பவற்றை உணர்ந்து சிந்தித்து செயற்படுதல் அவசியமாகும்.

தியாகப் பெருநாள் என்று வழியுறுத்தப்படுவதால் உமது உடைமை, நான் என்ற அகந்தை போன்ற சுயநல எண்ணங்கள் நம்மிடமிருந்து களையப்படும் போதுதான் சுயநலத்திலிருந்து விடுபட்டு எதையும் தாராளமாக கொடுத்துவ முன்வருவோம். எனவே இவ்வாறான நல்ல பக்குவத்துடன் எம்மை வாழ வைக்கவே இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

பகை உணர்களை மறந்து எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுடனும் சக வாழ்வுடனும் நல்லெண்ணத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ இந்நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப் போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :