ஒவ்வொரு வருடமும் இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி தேசிய சிறுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச முதியோர் தினமான இந்நாளில் சிறுவர்தினத்தையும் சேர்த்துக் கொண்டாடும் வெகுசில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
சிறுவர்கள் எமது உலகின் மிப்பெரும் பொக்கிசங்களாவர் மட்டுமன்றி எமது எதிர்காலத்தின் விளைநிலங்ககவும் உள்ளனர். எமது சிறார்களின் விருத்தியே எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது. ஆகவே வளர்ந்தவர்கள் சிறுவர்களுக்கான ஒழுக்கமிக்க சூழலையும், கல்வி ,ஆரோக்கியம் போன்ற வளங்களையும், துஸ்பிரயோகமற்ற உலகையும் சிறுவர்களுக்கு வளங்கி பிரகாசமிக்க நம் எதிர்காலத்திற்கு பங்களிக்க உறுதிபூணுவோம்.
ஒவ்வொரு சிறுவர்களும் வித்தியாசமான ஆற்றலுடையவர்கள், அவர்கள் அனைவரினதும் ஆற்றல்களை வெளிக்கொணர்வது வளர்ந்தவர்களது கடமையாகும். சிறுவர் நேயமான உலகினை வரவேற்பொம்.
இந்நாளில் அனைத்து சிறுவர்களுக்கும் எனது சிறுவர்தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஏ.எம்.எம். நௌ\hத்
தவிசாளர்
பிரதேச சபை
சம்மாந்துறை
2014-10-01
.jpg)
0 comments :
Post a Comment