பைஷல் இஸ்மாயில்-
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று புதன் கிழமை (01) அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் சிறுவர் தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேசத்திலுள்ள அரச தனியார் பாலர் பாடசாலைகளில் சிறுவர் கண்காட்சிகளும் சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களையும் வாழ்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
.jpg)
.jpg)
.jpg)


0 comments :
Post a Comment