பி. முஹாஜிரீன்-
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலத்தில் அதிபர் எம்.எச். அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (01) சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களது வீதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்த கொண்டனர். நிகழ்வில் மாணவர்கள் சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஊர்வலமாகச் சென்றனர்.
மேலும், சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் மாணவர்களது கலை நிகழ்வகளும் பாடசாலையில் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கல்வி வலயக் கல்வியலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளருமான பி.எம். அபுல் ஹஸன் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.எ. றிபாஸ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எச்.எல். இஸ்பானா உட்பட பாடசாலை ஆசியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் இப்பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் தேறிய மாணவி என்.எப். அப்றா கிண்ணம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மட்டம் மற்றும் கோட்டமட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களக்க சான்றிதழ்களம் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment