இது கதையல்ல நிஜமான அதிர்ச்சிதகவல் 18 வயது யுவதியின் வயிற்றில் 4கிலோ பந்து -படங்கள் இணைப்பு



யுவதி ஒருத்தியின் வயிற்றிலிருந்து நான்கு கிலோ எடை கொண்ட தலைமுடிகள் சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

Ayperi Alekseeva என்கின்ற 18 வயது யுவதி ஒருவர் திடீரென வயிற்றுவலியினால் அவதிப்பட்டிருக்கிறாள் உண்ணவோ, பருகவோ இயலாத நிலையில் வைத்தியசாலையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அந்த பெண்ணின் வயிற்றில் பெரிய எடை கொண்ட தலைமுடிகளினால் ஆன பந்தொன்று காணப்பட்டுள்ளது.

சம்பவத்தின் தீவிரம் உணர்ந்த வைத்தியர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றியுள்ளார்கள், என விசாரணையின் பின்பு தெரியவந்துள்ளது.
 அந்த பெண்ணின் பொழுதுபோக்கே தலைமுடிகளையும், உரோமங்களையும் உண்ணுவதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 மிகுந்த எச்சரிக்கையின் பிறகு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் வைத்தியர்கள். அந்தப்பெண்ணும் இனிமேல் ஒருபோதும் தலைமுடிகளையோ, உரோமங்களையோ உட்கொள்வதில்லை என வாக்குறுதியளித்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மட்டுமின்றி அறுவைசிகிச்சை செய்த வைத்தியர் குழாமும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அந்த வைத்தியசாலையின் 50 ஆண்டுகால நிர்வாகத்தில் ஒரு மனிதனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட அதிக எடை கொண்ட முடி பந்து இதுவென வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.<ம>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :