பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பல்தேவைக் கட்டிடத்தில் இயங்கிவரும் சிலோன் சர்வதேச ஆங்கிலக் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வும், மாணவர்களின் கண்காட்சியும் 01.10.2014 நேற்று அதன் பணிப்பாளர் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் ஏ.அதிசயராஜ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் ஏ.வஹாப், பொறியியலாளர் முஹீட், தொழிநுற்ப கல்லூரி விரிவுரையாளர் இபாம், மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.











0 comments :
Post a Comment