மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்







த.நவோஜ்-

ட்டக்களப்பு கொமர்ஷியல் கிரடிட் (Commercial credit) அனுசரணையில் 2015ம் ஆண்டு உயர்தர பரீட்சை பரீட்சையில் GIT பாடத்திற்காக தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பூரசாந்தன், கிழக்கு காமராஜர் பல்கலை கழக இணைப்பாளர் எஸ்.அமல் மற்றும் கொமர்ஷியல் கிரடிட் (Commercial credit) நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகாந்தன்;, மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எம்.மயூரதன் உதவி முகாமையாளர் ரி.மதிராஜ்;, விரிவுரையாளர் எஸ்.ஜே.முரளி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வானது கலை கலாசார ரீதியாக மாலையிட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றளுடன், 2 நிமிட மௌன இறை வணக்கத்துடன் நிறுவனத்தின் விழுமிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்து விரிவுரை எஸ்.ஜே.முரளியினால் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் கேள்வி பதில் வடிவில் விரிவுரை வழங்கப்பட்டது. இக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிகவும் பெறுமதியான பரீட்சைக்கு தயாராகும் வகையில் பரீட்சை வழிகாட்டி கையேடும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கிழக்கு பிராந்திய நிகழ்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.விஜிகாந்தின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இக்கல்வி கருத்தரங்கில் சுமார் 530க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :