ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று புதன்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து இப்பகுதியில் கட்சிப் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசிம் தலைமையிலான இக்குழுவில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே, மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான, எம்.எஸ்.மரைக்கார், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது அவர்கள் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து இப்பகுதியில் கட்சியை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பிலும் புதிய அங்கத்தவர்களை உள்வாங்குவது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். மருதமுனையில் பொதுக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள் பங்கேற்கும் பிரதான கலந்துரையாடல் கூட்டம் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இன்று புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா குறிப்பிட்டார்.
.jpg)
0 comments :
Post a Comment