புனித அல்குர்ஆனின் போதனைகளுக்கேற்ப இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
.jpg)
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;
உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
முஸ்லிம் மக்கள் தமது நாளாந்த ஐவேளைத் தொழுகையின் போது முன்நோக்குகின்ற திசையான புனித மக்கா நகரில் இலட்சக் கணக்கானவர்கள் ஒன்றுசேரும் புனித ஹஜ் உலகெங்கிமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும்.
பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலா சாரங்களையும் உடைய இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவததையும் இஸ்லாம் இவ்வுலகிற்குக் கொண்டுவந்த ஆன்மீக உணர்வையும் பறைசாற்றுகின்ற காட்சி ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் ஊடாக ஆயிருக்கணக்கான இலங்கை முஸ்லிம்களும் இந்த வருடாந்த ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் புனித அல்குர்ஆனிதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கான தமது அர்ப்பணங்களை புதுப்பித்து உலகெங்குமுள்ள மக்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வு நிலவ வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.
இந்த விசேட தினத்தில் முஸ் லிம்களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்.
0 comments :
Post a Comment