எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராக இருந்தால் அந்தத் தேர்தலை சட்ட விரோதமானதாகக் கருதி அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி. ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 ஆவது தடவையாக தற்போதைய ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமையில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரின் வேட்பு மனுவை தேர்தல்கள் செயலகம் ஏற்றுக் கொள்ளுமாயிருந்தால் அது சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் ஜே.வி.பி., அவ்வாறு நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுடன் இணைந்து நாடு பூராகவும் கருத்தரங்குகளை நடத்த ஜே.வி.பி. நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி கண்டியில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள முதலாவது கருத்தரங்கு ஆரம்பமாகவுள்ளதாக ஜே.வி.பி. ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment