நாளை தொடக்கம் முழு இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரே விலைக்கு விற்கப்படும்!

கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் நாளை (01) தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி நாளை தொடக்கம் முழு இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரே விலைக்கு விற்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிசேன அமரசேகர தெரிவித்துள்ளார். 

வெளி மாவட்டங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து செலவை ஈடுசெய்யவென வேறு மாவட்டங்களில் பெற்றோல் மற்றும் டீசல் கொழும்பிலும் பார்க்க அதிகமாக விற்கப்பட்டது. 

எனினும் நாளை தொடக்கம் போக்குவரத்து செலவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக் கொள்ளும் என சிறிசேன அமரசேகர குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :