ஓய்வு பெறும் மருதமுனை ஷம்ஸ் மத்தி கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக் அவர்களுக்கான பிரியாவிடை!

 பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி இன்று (31-10-2014) ஓய்வு  பெறும் அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (30-10-2014) பாடசாலை நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதி அதிபர் எம்.எம்.எம்.முசர்ரப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட விருந்தினராக ஓய்வு பெறும் அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக் அவர்களின் பாரியார் கவிதாயினி மாஜிதா தவ்பீக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் சம்மாந்தறை வலயக் கல்விப் பணிப்பாளருமான எம்.எஸ்.சௌதுல் நஜீம் கலந்து கொண்டார். அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக் தம்பதி பேன்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருமான நியாஸ் எம்.அப்பாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள,; பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், மற்றும் மாணவர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். அதிபர் ஏ.ஆர்.எம்.தவ்பீக் அவர்களுக்கான மாணவிகளின் வரவேற்புப் பாடல்களும், வாழ்துப் பாடல்களும் ஆசிரியர்களின் கவிதைப் பாக்களும் அரங்றே;றப்பட்டன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :