மண் சரிவு அனர்த்தம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள செய்தி!

துளை மாவட்டத்தில் மீறியாபெத்த, கொஸ்லந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில்  ஏராளமானோர் புதையுண்டும், காணாமலும் போயுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும்  அடைந்தேன். தோட்டப்புற மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன். 

இலங்கையில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் நிகழ்ந்த கோர சுனாமி அனர்தத்தின் பின்னர் ஏற்பட்ட  பாரிய மனித அவலமாக இந்தச் சம்பவத்தைக் கருதலாம். 

இந்த மண்சரிவில் சிக்கி காயமடைந்தோர் சுகமடைய பிரார்த்திப்பதோடு, இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக ஆலோசகர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :