அம்பாரை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்களின் ஒன்று கூடல் எதிர் வரும் நவம்பர் மாதத்தில் கல்முனையில் நடைபெறவுள்ளது.

அம்பாரை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை தொடக்கம் பொத்துவில் வரையான தவ்ஹீத் சகோதரர்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இவ் ஒன்று கூடல் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியிலான ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் கருப்பொருளாக கொண்டதாக இருக்கும் என அமைப்பின் துணைத்தலைவர் அஹமத் ரஷாத் தெரிவித்தார்.
காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலில் கலந்து கொள்ள விரும்பும் அம்பாரை மாவட்டத்தைச்சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் தமது வருகை பற்றி முன் கூட்டியே அறிவிப்பதன் மூலம் பகல் போசனத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒன்று கூடலில் கலந்து கொள்ள விரும்புவோர் 0776572882 அல்லது 0777570639 என்ற இலக்கத்துக்கு தமது வருகை பற்றி தமது பெயரை குறிப்பிட்டு எஸ் எம் எஸ் பண்ணும்படி கேட்கப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment