பின்நோக்கி திரும்பிய பாதம் - எலும்பு நோயால் பெண் அவதி!

எலும்புப் புற்றுநோயால் காலின் தொடைப்பகுதி வெட்டி அகற்றப்பட்ட பெண்ணொருவருக்கு அவரது காலின் கீழ்ப்பகுதி புதிய கால் மூட்டின் மூலம் பின்பக்கமாக நோக்கிய நிலையில் இணைக்கப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. 

கிழக்கு யோர்க்ஷியரைச் சேர்ந்த ஜோர்டன் மூடி (Jordon Moody) (22 வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு குதிக்கால் முன்புறமாகவும் பாதவிரல் பகுதி பின்னோக்கிய நிலையிலும் காலின் கீழ் பகுதி பொருத்தப்பட்டுள்ளது. எனினும் அவரால் தனது மூட்டுக்களைப்பயன்படுத்தி பின்னோக்கிய பாதத்தைக் கொண்ட காலை சாதாரண நிலையிலுள்ள கால்களைப்போன்று இயல்பாக வளைக்க முடிகிறது. 

இந்நிலையில் தனது பாதிக்கப்பட்ட காலின் பாதத்தை முன்புறமாக சரியான முறையில் திருப்பி மீள்கட்டமைக்கும் வகையில் புதிய கால் மூட்டை பொருத்த ஜோர்டன் மூடி எதிர்பார்த்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :