கல்முனையில் பெருநாள் தொழுகை -படங்கள் இணைப்பு

எஸ்.எம்.எம்.றம்ஸான்-

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பொருநாளை முன்னிட்டு இன்று கல்முனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகை பள்ளிகளிலும் திடல்களிலும் இடம் பெற்றது.









எஸ்.அஷ்ரப்கான்-


ல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் ஹூதா பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்; நபி வழி திடல் தொழுகை இன்று திங்கட் கிழமை (06) காலை 6.45 மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்றது.

கல்முனையில் வழமைபோன்று பெருந்திரளான ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்ட இத்தொழுகையை மௌலவி முஹம்மட் பிர்னாஸ் நடாத்திவைத்தார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தில் மௌலவி பிர்னாஸ் உலக மக்களுக்கான அருட்கொடையான வழிகாட்டிகளாக வந்த நபிமார்களில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் இறை கட்டளையை மீறாத நிகழ்வினை நினைவு கூரும் இத்தியாக திருநாளை எவ்வாறு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், நபி இப்றாஹீம் அவர்களுக்கு நிகழ்ந்த சோதனைகளை மனிதர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக விளக்கினார்.

இப்பெருநாள் தொழுகையில் உலமாக்கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் உட்பட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :