உலக மக்களிடையே சமாதானத்தையும் அமைதியையும்,மேலோங்கச் செய்யும் புனித இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் அனைத்து முஸ்லீம்களிற்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை யாழ் பல்கலைக்கழக முன்னாள் முஸ்லீம் மஜ்லீஸ் செயலாளரும் மருத்துவ பீட மாணவருமான யூசுப் எம்.சாதீக்கீன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,
விட்டுக்கொடுப்பு,மன்னிப்பு ஆகிய மிக முக்கிய இஸ்லாமிய பண்புகளின் அடிப்படையில் பகைமையை மறந்து புதுப்பொலிவுடனும் உத்வேகத்துடனும் சகல சமூகத்தினரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்று இந்நாளில் எல்லா வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.
யாழ் பல்கலைக்கழகத்தை பொறுத்த மட்டில் சகல பீடங்களிலும் முஸ்லீம் மாணவர்கள் கடந்த சில வருடங்களாக உள்வாங்கப்பட்டு வெற்றிகரமாக தமது கற்றல் நடவடிக்கைகளை சகோதர இன மத நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றதை யாவரும் அறிந்ததே.
அந்தவகையில் ;செயற்பாடு மென்மேலும் தொடர்ந்து சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஐக்கியத்துடன் என்றென்றும் தொடர்வதற்கு தியாகத்திருநாளினை எல்லோரும் பயன்படுத்தி கொள்வோம் என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment