இலங்கையில் அனைத்தையும் அறிந்த எல்லாம் தெரிந்த ஒருவர் கோத்தாபய ராஜபக்சதான் -மொஹான் பீரிஸ்

லங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச என நீதிமன்றத்தில் புகழாராம் சூட்டியுள்ள பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ் இதன் மூலம் அரசாங்கத்துடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் விவசாய துறை விஞ்ஞானிகள் சிலர் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல்வழக்கு தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளின் எதிர்ப்பையும் மீறி தனது மேதாவித்தனத்தை பல இடங்களில் வெளிப்படுத்திய மொகான் பீரிஸ் அனைத்தையும் அறிந்த ஒருவர் கோத்தாவே என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் வத்திக்கானிற்க்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான தூதுக்குழுவில் இலங்கையின் பிரதம நீதீயரசர் மொகான் பீரிசும் இடம்பெற்றிருந்ததற்க்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இலங்கையின் சட்டத்தரணிகள் அமைப்பு.

பிரதம நீதீயரசர் இக்குழுவிற்க்குள் உள்வாங்கப்பட்டது நாட்டின் நீதீத்தறையின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நலனை காப்பதற்காக நீதிபதிகள் அரசாங்கத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்,என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

<நன்றி:- GTN>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :