சமூகம்! சமூகத்தைத் திரும்பிப் பார்க்குமா?

எம்.எம்.ஏ.ஸமட்-

லங்கை பல்லின சமூங்கள் வாழும் நாடு என்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும்தான் இந்த நாட்டில் வாழ வேண்டும் இது எங்களது நாடு என்று இந்நாட்டிலுள்ள கடும்போக்காளர்கள் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நமது இருப்புக்கு எது நடக்குமோ எது நடக்காதோ என்று இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் சிந்தித்தித்துக் கொண்டிருக்குக்கும் ஒரு கால கட்டத்தில் சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமைக்கான குரல்கள் பரவலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்த சிறுபான்மை சமூக ஒற்றுமைக்கான அழைப்பானது நிச்சயம் செவிமடுக்கப்படக் கூடியது மாத்திரமல்ல தமது இருப்பையும் உரிமையையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக இந்நாட்டில் வாழ அது வழிவக்கும்.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை மலர வேண்டும். அரசியல் என்றும் ஆண்மீக் கொள்கைகள் என்றும் பிரிந்து நிற்றும் நாம், நம்மை நாமே காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் பாதிக்கப்படப்போது நமது எதிர்கால சந்ததியினரே.

நம்மில் ஒரு கூட்டம் நல்ல பி;ள்ளைகளாக படம் எடுத்து ஆடி பரம்பரை முஸ்லிம்கள் என்று கடும்போக்காளர்களினால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டு வரும் நிலையில், உரிமைகளுக்காகவும் மார்க்கத்தில் உறுதியான நம்மிக்கைக்காகவும் குரல் கொடுக்கப்பவர்களும் அதற்காக செயற்படுபவர்களும் அடிப்படைவாதிகள் என்றும் இஸ்லாமிய தீவிர வாதிகள் என்றும் அதே கடும்போக்காளர்களினால் பெயர் சூடப்பட்டுமுள்ளனர்.

இந்நிலையில், நமது சமுதாயம் பல்வேறு வழிகளில் சீரழிந்து கொண்டிருக்கிறது. சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இளம் சமுதாயத்தினர் இஸ்லாமிய வழிமுறைகளிலுமிருந்தும் தங்களது நடத்தைப் பாங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விலகி நடப்பதில் நாட்டம் காட்டி வருகின்றனர். அதுதான் நாகரீகம் என்று புரிந்து வாழ்கின்றனர்.
நாம் எவ்வாறு வாழ்ந்தாலும் நமது சமுதாயத்தினர் எந்;த நல்ல அல்லது கெட்ட விடயங்களைப் புரிந்தாலும் முஸ்லிம் என்ற அடிப்படையில்தான் நாம் பார்க்கப்படுகிறோம். நம்மில் ஒருவர் செய்யும் சரியும் அல்லது பிழையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையுமே பாதிக்கும் என்பது நம்மில் ஞாபமிருக்க வேண்டியதொன்றாகும். 

அவை ஒருபுறம் இருக்க, இன்று நமது சகோதர முஸ்லிம்கள் பல சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வல்ல இறைவன் சோதிப்பதற்காகவே சிலரை எல்லா வளமும் கொண்டவர்களாகவும் இன்னும் சிலரை வளமாற்றவர்களாகவும் படைத்துள்ளான்
இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் சோதிக்கப்ட்டிருக்கிறார்கள். அச்சோதனையில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொருளாதார ரீதியில் பல்வேறு சோதனைகளையும் சுமைகளையும் சுமந்தவர்களாக இத்தியாகப் பெருநாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்;. அவர்களின்; இதயப் பரப்பமெங்கும் வேதனை அப்பிக்கிடக்கிறது. 

குடியிருக்க வீடுவாசல் இல்லாமல் வாடகை வீட்டிலும் மாற்றார் தயவிலும் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும், உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைக்; கட்டில்களின் சொந்தக்காரர்களாகவும், வாழ்க்கையின நெருக்குவாரங்களால் உள்ளம் உருக்குழைந்து தன்நிலை மறந்த உள நோயாளர்களாகவும், வருமானம் வற்றிக் குடும்பச் சுமையின் அவஸ்தையால் அல்லறுபவர்களாகவும் பொருளாதாரப் பற்றாக்குறைக்காகவும் பெருமை வாழ்க்கைக்காகவும் கை நீட்டி வாங்கிய கடனைத் திருப்பியளிக்க இயலாது அதன் வலியால் சுய கௌரவத்தை காற்றில் வீசிவர்களாகவும் இன்னும பற்பல இன்னல்களோடு நம் சமூகத்திற்குள் இன்னுமொரு சமூகமாக பலர் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெருநாளின் சந்தோசப் பெருமழை நம்மிலும் பொழியாதா என்ற பெருமூச்சை வெளிச்செலுத்தியவர்களாவே உள்ளனர்.

இவர்களின் இதயங்களை சந்தோஷத்தால் நனைப்பவர்கள் யார்? இவர்களும் இத்திருநாளின் இன்பப் பொழுதை ரம்பியமாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்விகளுக்கு நம்மில் பலரிடம் விடை இருக்கிறது. ஆனால் அதற்கு விடைகொடுக்க இதயமில்லை.

'அயல் வீட்டார் அன்னியவராக இருந்தாலும் அவர் அயல்வீட்டார் என்பதற்காக அவரிலும் நமக்கு பொறுப்பு உள்ளது' என்ற நபிகளாரின் திருவசனம் நம்மில் பலரது உள்ளங்களிலிருந்து எடுபட்டுவிட்டது. இதனால்தான், அண்டைவீட்டு நம் சகோதரன் குடிசை வீட்டில் பாயில் படுத்துறங்க நம்மில் பலர் மாடா மாடிகைகளில் பஞ்சன மெத்தையில் தூங்கி எழும்புகின்றனர்.

ஒரு வேளை சோற்றுக்காக நம் சகோதர சகோரிகள் ஏங்கிக் கிடக்க நம்மில் பலர் புரியாணி சாப்பிட்டு மிஞ்சியதை குப்பையில் வீசி விட்டு ஏப்பமிடுகின்றனர்.

கல்யாண வாழ்க்கைக்காக காந்திருந்து காந்திருந்து காலம் கடந்த பின் மணவாழ்கை காணது கண்ணீரால் காவியம் வடிக்கும் நமது சமுதாயக் கன்னியரைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாது, நம்மில் பல கொடை வள்ளல்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணத்தை வீண்விரையம் செய்து தங்கள் பெண்மணிகளுக்கு திருமணம் நடத்தி அழகு பார்க்கின்றனர்.
அல்லாஹ்வையும் அண்ணல் நபியையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வாய் கிழியப் பேசுவர்கள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்காது போலிக் கௌரவத்தை மதித்து ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல என்ற நிலையில் வாழ்கின்றனர். 

சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாடுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸுலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர்.
இதனால் சமுதாயத்தின் மானமும் மரியாதையும் காற்றில் பறக்க அவமானத்தோடும் கவலையோடும் சமுதாயத்திலுள்ள சீதேவிகள் கண்ணீர் சிந்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம், நம்மில் வளம் இருந்தும் அவற்றை சமுதாயத்தின் தேவைக்காக அதன் நலனுக்காக பயன்படுத்தாதவர்களே. சமுதாயம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை இன்னும் நம்மால் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

தனதும் தனது குடும்பத்தினரதும் அனுபவிக்கும் வாழ்க்கையின் ரம்பியம்போல் அடுத்தவரின் வாழ்விலும் ரம்பியமான பொழுதுகள் மலர வேண்டும். அதற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் உருவாகும் வரை இந்தப் பின்னடைவுகள் தொடரத்தான் செய்யும்
இருப்பினும், குறைந்த பட்சம் நமது சமுதாயத்தில் இன்னல்களால் அல்லலுரும் மக்களின் வாழ்வில் எவ்வாறு ஒளியை ஏற்ற முடியும் என்று சிந்திப்பதற்கும் அதற்காக முயற்சி மேற்கொள்ளவதற்கும் இடமளிக்காத, நமது சமுதாய சிந்தனையற்ற மனப்பாங்கையாவது மாற்ற முயற்சிக்க வேண்டும். 

இந்த மனப்பாங்கின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பமாக இத்தியாகத் திருநாளைப் பயன்படுத்த முன்வருவோம்.

இத்திருநாளில் வீண்விரையம் செய்யப்படும் வளங்களை நமது சமூதாயத்தில், நமது குடும்பத்தில் இன்னல்களோடு அல்லலுருவோருக்காக செலவு செய்ய முயற்சிப்போம். இந்நாட்களில் பல்வேறு நெருக்கடிகளால் அல்லலுருவோர் உதவும் மனப்பாங்கோடு திரும்பிப் பார்க்கப்படுதல் வேண்டும். 

மற்றவர்கள் எவ்வாறு வாழ்ந்தாலும் பருவாயில்லை. சமூகம் என்ன கேடுகெட்டாலும் நமக்குப் பிரச்சினையே இல்லை. என்ற மனப்பாங்கிலிருந்து மாறி ஒரே இறைவன். ஒரே நபி, ஓரே கிப்லா, ஒரே குர்ஆன் என்ற அடிப்படைக் கொள்கையோடு வாழும் நாம், நம்மில் வழி தவறுவோர்களாகவும், மார்க்கத்தில் பற்றற்றவர்களாகவும், பொருளாதாரத்தில் வரட்சியுடையவர்களாவும், இன்னும் பல்வேறு ஏக்கங்களையும் தாக்கங்களையும் எதிர்கொண்டு நம் சமூகத்திற்குள்ளேயே ஒரு சமூகமாக வாழுவேரை நாம் ஏன் திருப்பிப்பார்க்காமல் இருக்கிறோம்.

நமது சமூகத்துக்குள் திரும்பிப் பார்க்கப்படாத இன்னுமொரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அச்சமூகமும் வாழ்வில் வளம்பெற வேண்டும். மார்க்கம் காட்டிய வழியோ வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் அதற்கானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நாட்கள்; பயன்படுத்தப்பட வேண்டும். 

நம்மால் முடிந்தவற்றை முடியுமான அளவு அள்ளி வழங்கி அவர்களும் இந்தத் தியாகத் திருநாளின் ரம்பியமான பொழுதுகளின் இன்பத்தை அனுபவித்திட உதவிட வேண்டும். அதற்கான மனப்பாங்கை நம்மில் வல்ல இறைவன் ஏற்படுத்துவானாக. 
 
இன்னும், முஸ்லிம் சமூகமும் தங்களுக்குள்ள அரசியல், ஆண்மீக கருத்து முரண்பாடுகளைத் துறந்து ஒற்றுமை என்ற கயிற்றை இருகப்பற்றி பிடிப்பதன் ஊடாக நமது எதிர்கால சந்ததியினரின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு இந்நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை சமூகத்தோடும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள இனவாதப் போக்கற்றவர்களோடும் கைகோர்த்து இனவாhத்திற்கு சாவுமணியடிக்க ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகவே உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :