கழுத்தறுப்பு......................................

ரஹுமத் மன்சூர்-

ண்மையில் ஊவா மாகாண தேர்தல் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. இதில் அரசாங்கம் வெற்றி பெறும் என்பது ஏற்கனவே உறுதியானதொன்றாக இருந்தாலும் இதில் பெருபெற்று பெறுமா என்பது தான் கேள்விக்குறியாகவிருந்தது.

 இருந்த போதும் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள ஊவாமாகாணத்தில்  இருமாவாட்டங்களைச்  சேர்ந்த 07 இலட்சத்து 17 ஆயிரத்து 66 பேர் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். அவற்றில் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 906 வாக்குகளைப் பெற்றே இம்முன்னணி பெரு வெற்றியீட்டி இருக்கின்றது. 

இதன் மூலம் இரு போனஸ் ஆசனங்கள் உட்பட 19 ஆசனங்களை ஊவா மாகாணத்தில் இம் முன்னணி தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரு மாவட்டங்களிலுமே தோல்வியைத் தழுவி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 773 வாக்குகளையே பெற்றுக் கொண்டது. இத தனியோ ஹரின் பெர்னாண்டோ என்ற நபருக்காக அளிக்கப்பட்ட வாக்குகளே தவிர தலைமைக்காவோ அல்லது கட்சிக்காவோ அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல என்பது நிதர்சனம். அந்த வாக்குகளின்  மூலம் இக்கட்சிக்கு 13 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப் பெற்றிருக்கின்றன. 

அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணி இரு மாவட்டங்களிலுமே தலா ஒரு ஆசனத்தையே பெற்று இருக்கின்றது.  சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியோ இத்தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையுமே வெற்றி பெறவில்லை என்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகியன ஒன்றிணைந்த கூட்டணியும் ஆசனத்தை வெற்றிபெற்றிருக்கவில்லை. 

இவ்வாறான நிலைமையில் நாம் சில விடயங்களை ஆராயக் கடைப்பட்டிருக்கின்றோம். அதாவது அரசின் வாக்கு வங்கியில் குறைவு அதிகாரிப்பு, எதிர்கட்சிகளின் நிலை என்பதற்கு அப்பால் சிறுபான்மையினரில் முஸ்லிம்கள்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பதை அவதானிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களாக களமிறங்கியதால் தமிழர்களின் வாக்குகள் அதற்குள் பங்கிடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கியது. அவ்வாறான நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பும் களமிறங்கியிருந்தது வெளிப்படை.

முஸ்லிம் கூட்டமைப்பு 

ஊவா மாகாணசபைத் தேர்தலில் வழக்கம் போன்று முஸ்லிம்களின் தேசிய சக்தியாக தனியாக போட்டியிடுவதாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் மலையக முஸ்லிம் கவுன்ஸில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், உலமா சபை, சூறாசபை, மௌலவிமார்கள், புத்திஜீவிகள் அனைவரும் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொள்வதை நாம் அனைவருமே ஏகோபித்திருக்கின்றோம். ஆகவே முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு களமிறங்கினால் அங்குள்ள சொற்ப அளவிலான முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதற்கமைய மு.கா தலைமையும் கட்சிக்குள் இருந்து சில எதிர்ப்புக்களையும் கடந்து ரிஷhட் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் களமிறங்குவதற்கு முன்வந்திருந்தார். 

அதேநேரம் குறிப்பாக இந்த இணைப்பு அவசியம் என  பல்வேறு செயற்பாடுகளை பதுளையைச் சேர்ந்த சட்டத்தரணி இம்தியாஸ் போன்ற தனிபர்களும் மு.கா தலைமையிடமும் அ.இ.ம.க தலைமையிடமும் மாறிமாறி பேசி ஒன்றுபட்டு களமிறங்க வைத்திருந்தனர். அது மட்டுமன்றி மு.காவின் உயர்பீடத்தினர் நேரடியாக பதுளைக்குச் சென்று அங்குள்ள மக்களின் உண்மையான உணர்வையும் அறியத் தவறியிருக்கவில்லை. இந்நிலையில் தான் மு.காவும் அ.இ.ம.கவும் கூட்டணியில் இணைந்ததுடன் சிவில் அமைப்பாக காணப்பட்ட மலையக  முஸ்லிம் கவுன்சிலையும் இணைத்துக்கொண்டது. 

அதனைத்தொடர்ந்து எமது சமூகத்தின் குரலை ஊவா மாகாண சபையில் ஒலிக்கச் செய்வதற்காக முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவாகும் பட்சத்தில் அந்த நபரை மு.காவோ அல்லது அ.இ.ம.கவோ சொந்தம் கொண்டாடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பதுளை பள்ளிவாசல் முன்றலில்; சூறா சபை, உலமாக்கள், மத்தியில் இடம்பெற்ற கூட்டத்தில் பகிரங்க வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு ஒரு புரிந்துணர்வுடன் தேர்தல் பணிகள் ஆரம்பமாகியிருந்தன. 

மு.கா தலைமையின் பகிரங்க சவால் 

இவ்வாறான நிலையில் மு.கா தலைவர் வெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது நாம் ஆளம் கட்சியின் வாக்குப்பலத்தை அதிகரிக்க இங்கு வரவில்லை. தம்புள்ள முதல் அளுத்தகம வரையில் எமக்கு நிகழ்ந்த அநீதிகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே அது போன்ற சம்பவங்கள் நிகழ்தால் எமது குரல்களால் இருப்பதற்கு உள்ளுராட்சி முதல் பாராளுமன்றம் வரை எமது பிரதிநிதிகள் அவசியம் ஆகவே அதனை உறுதிப்படுத்தப்பட வேண்டியது உங்கள் கைகளிலேயே உள்ளது. 

மேலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போலிபிரசாங்களை மேற்கொண்டு உங்களை திசை திருப்ப முயலலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து செல்கின்றது. ஆகவே அவர்கள் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளை பெறுவதற்காக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி தாம் பலப்பட்டு விட்டோம் எனக் காட்டாது பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையை பெற்றுக்காட்ட வேண்டும் எனச் சவால் விடுத்திருந்தார்.

குள்ள நரித்தந்திரத்தால் மாறிய நிலைமை

அவ்வாறிருக்கையில் கடந்த காலத்தில் முஸ்லிம்களை திட்டமிட்டு பல்வேறு தருணங்களில் கழுத்தறுத்திருந்தது ஐக்கிய தேசியக் கட்சி. குறிப்பாக 1983இல் தமிழர்களை இலக்கு வைத்து கலவரத்தை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அரசு அதற்கு பின்னரான காலத்தில் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள், விடுதலைப்புலிகளுடன் முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றி நட்டாற்றில் விடும்போது வேடிக்கை பார்த்தமை, அதே விடுதலைப்புலிகளுடன் இரகசிய ஒப்பந்தங்கள், பேரம்பேசும் சக்தியை வலுவிழக்கச் செய்ய மு.காவை உடைப்பதற்கான சதி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 

ஆட்சிப்பீடத்தில் அமர வைத்த மு.காவை தமது கூட்டணியில் இருந்து வெளியேற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அதன் பின் ஆட்சி அதிகாரம் என்பது கனவானதுடன் இன்று பெரும்பான்மை சமூகத்தின் வாக்குப்பலத்தையும் இழந்து ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி என்ற சக்தியே இல்லாமல் செய்வதற்கான முனைப்பையும் மேற்கொண்டு வருவது ஒருபுறமிருக்க தொடர்ந்தும் மு.காவையும் முஸ்லிம் சமூகத்தையும் குறி வைத்து தனது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

அதாவது அசாத்சாலி, மனோகணேசன், முஜிபுர் ரஹ்மான் போன்ற வண்டிவண்டியாய் கதைகூறுபவர்களை தேர்தல் களத்தில் பிரசாரத்தில் களமிறக்கி சிறுபான்மை சமூகத்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. அது மட்டுமட்டுமன்றி மு.காவும், அ.இ.ம.கவும் அரசின் பின்னணியிலேயே கூட்டமைப்பாக வந்திருக்கின்றார்கள் எனவும் போலிப்பிரசாரம் மேற்கொண்டது. இதனால் மக்களிடையே ஐயப்படான நிலைமையொன்று ஏற்பட்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கு வலுச்சேர்ந்திருந்தன.

இவற்றுக்கு எல்லாம் அப்பால் முஸ்லிம் கூட்டணி தான் களமிறங்க வேண்டும் என தனிநபராக குரல்கொடுத்து செயற்பட்ட சட்டத்தரணி இம்தியாஸ் போன்ற தனிநபர்கள் ஐ.தே.கவுடன் இணைந்தது  செயற்பட்டது மட்டுமல்ல  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு செயற்பட்டமையும் வழங்கிய வாக்குறுதியை  அப்படியே அப்பட்டமாக மீறியிருந்தார்கள். இதனால் திசைதிருப்பட்ட மக்களும் அந்தச் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு விட்டார்கள். 

தேர்தலில் வெற்றி தோல்வி அல்ல முக்கிய விடயம். எக்கான பிரநிதித்துவம் கிடைத்ததா என்பது தான் கேள்வியாகவுள்ளது. இதனை ஊவா மக்கள் ஒரு நொடியாவது தற்போது ஊவா முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் கழுத்தறுப்புக்கள், நம்பிக்கை துரோகங்கள் எவையும் புதியதொன்றல்ல.  இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றவைதான். ஆனால் மு.காவின் தேசிய அரசியல் பலமும், பேரம்பேசும் சக்தியும் என்றுமே வலுவிழந்து போகவில்லை. வலுவிழக்கப்போவதுமில்லை. ஊவா மக்கள் தேர்தல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டது தான் முஸ்லிம் கூட்டணியின் தோல்வி. ஆனால் அந்த உண்மையை உணர்வதற்கு வெகுகாலம் தேவைப்படாது. 

வெகுவிரைவில் உணர்வார்கள்.அதேபோன்று மு.காவினை தோற்கடித்து விட்டதாகவும் அரசியல் அஸ்தமிக்கின்றது எனக் கூறுவபர்வகள் ஒன்றை கருத்திற்கொள்ள வேண்டும். மு.கா என்பது மக்கள் சார்ந்த ஒரு இயக்கம். மக்களின் விருப்பு வெறுப்புக்களை மையமாக வைத்த முடிவுகள் எடுக்கப்டுகின்றவே தவிர அரசியல் நலன்கள், பதவிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்வேண்டும். 

எதிர்வலும் காலம் அரசியல் தளத்தில் முக்கியமானது. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன. இதில் முஸ்லிம்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள் என்பதை இன்று சர்வதேசமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. 

ஆகவே ஊவாவை படிப்பினையாக வைத்து ஐ.தே.க போன்ற இனவாதக் கொள்கைவகுப்பாளர்களை கொண்டதும் ஏகாதிபத்தியங்களுக்கு விலைபோகும் கட்சிகளின் மாயவலைக்குள் சிக்காது தீர்க்கமான சிந்திக்க வேண்டியவர்களாக முஸ்லிம்கள் உள்ளார்கள். அவர்களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு மு.கா என்றுமே பக்கத்துணையாய் இருக்கும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :