சர்வதேச பிறை அடிப்படையில் இன்று இலங்கையில் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை -படங்கள்




பழுலுல்லாஹ் பர்ஹான்-

லக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 04-10-2014 இன்று சனிக்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கரைப்பற்று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்த ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை இன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது.

இதில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் அஸ்பர் (பலாஹி) நிகழ்த்தினார்.

இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

சர்வதேசப் பிறை அடிப்படையில் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :