கடந்த சில காலமாக இப்பகுதியில் சுமார் 25 யானைகளைக் கொண்ட கூட்டமொன்று பிரதேசத்தில் உலாவி வந்ததாகவும் அவற்றில் ஒரு கொம்பன் யானை மிகவும் சண்டித் தனம் காட்டி வந்துள்ளது. பிரதேச மக்கள் அதனை ‘சண்டியா’ என்ற பெயர் கொண்டு அழைத்துள்ளனர்.
மேற்படி சண்டியாவிற்கும் அதே கூட்டத்திலிருந்த இன்னொரு கொம்பன் யானைக்குமிடையே மோதல் ஏற்பட்டு அவை ஒன்றையொன்று தாக்கிக் கொண்டுள்ளன. இந்த மோதல் உக்கிரமடைந்து இரவு வரை சுமார் 5 மணித்தியாலங்கள் மோதியுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இறுதியில் அதில் ஒரு யானை நீரோடையில் வீழ்ந்துள்ளது. அவ்விடத்திற்குச் சென்ற சண்டியா என்ற கொம்பன் யானை தனது கொம்பினால் கீழே வீழ்ந்த யானையைத் தாக்கிக் காயப் படுத்தியதில் அது இரத்தம் பீறிட்ட நிலையில் மரணித்துள்ளது. அதன் உயிர் பிரியும் வரை சற்று நேரம் சண்டியா என்ற கொம்பன் அங்கு தரித்து நின்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.<மெட்றோநியுஸ்>

0 comments :
Post a Comment