பெரும்பான்மை இன மக்களுக்காக மட்டுமே கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கின்றார் பந்துல குணவர்த்தன. எத்தனையோ தடவைகள் தமிழ்ப்பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரையில் கல்வி அமைச்சர் தமிழ்ப் பாடசாலைகளை கண்டு
கொள்ளாமலே உள்ளாரென்று பிரதியமைச்சர் பிரபாகணேசன் சபையில் நேற்று குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்திலே உரையாற்றும் போதே தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கொழும்பில் சிங்கள பாடசாலைகள் அனைத்திற்கும் ஆய்வு கூட வசதிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆனால், கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு ஆய்வு கூடங்களை அமைத்துக் கொடுக்குமாறு எத்தனையோ தடவைகள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து வேண்டுகோளை முன்வைத்தோம்.
ஆனால், இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. கல்வி அமைச்சர் பெரும்பான்மை இன மக்களுக்காக மட்டுமே கல்வி அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
தமிழ் மக்களை ஓரம் கட்டுகிறார். இதனை ஜனாதிபதியிடம் முறையிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு ஆய்வு கூடங்களை அமைத்துக் கொடுப்பேன்.
மலையகம்
மலையகம் அம்மக்களும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது கவலையளிக்கிறது. அங்கு 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியை பெருந்தோட்ட அபிவிருத்தி நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு போதும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படப் போவதில்லை.
எனவே, அரசு நேரடியாக தலையிட்டு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
கொழும்பு
கொழும்பில் ??????வீடுகளில் வாழ்ந்த மக்களுக்கு இன்று அனைத்து வசதிகளுடனான தொடர் மாடித் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் சிறுபான்மை இன மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு
அரசு முன்னெடுக்கும் அபிவிருத்திகளுடன் இணைந்து வடக்கிற்கான அபிவிருத்திகளுக்கு கூட்டமைப்பு பங்களிப்பு செய்ய வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கல் முழுமையாக கிடைக்கவில்லை. உண்மை தான். அதனால் ஒதுங்கிக் கொண்டிருக்காமல் அரசின் அபிவிருத்தியுடன் இணைவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் தேசியத்தை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே நடைபெறுவதில்லையென்றும் பிரதியமைச்சர் பிரபாகணேசன் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment