ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டு நிறைவு விழா





பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகம் 2014ம் ஆண்டுக்கான கோறளைப்பற்று மேற்கு கழகங்களுக்கிடையிலான கிரிக்கட், உதைப்பந்தாட்டம், எல்லே போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முழுப் பங்காற்றிய கழக வீரர்களை கௌரவிக்கும் முகமாகவும் புனித ஹஜ்ஜூப் பொருநாளை முன்னிட்டும் யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யூ.எல்.எம் பைரூஸ் அதன் செயலாளர் ஏ.எஸ் மில்ஹான் மற்றும் நிருவாகத்தினர்கள் தலைமையில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கௌரவிப்பு விழாவுடன் கூடிய மின்னொளி சினேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டியினை கடந்த 07.10.2014 செவ்வாய்கிழமை மாலை நடாத்தியது.

இதில் குறிப்பாக உதைப்பந்தாட்ட வீரர் மொஹம்மட் றம்சான் மற்றும் இளம் கிரிக்கட் அணிக்கான தலைவர் ஹூமைஸ்கான் ஆகியோரைக் கௌரவிக்கும் முகமாகவும், உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் திரு. மாணிக்கசிங்கம் ரட்னசிங்கம், மட்டக்களப்பு சிறந்த உதைப்பந்து வீரர் திரு. அன்டன்; மற்றும் ஏறாவூர் லுளுளுஊ அணியின் வீரரும் மட்டக்களப்பு மாவட்ட சிறந்த வீரர்களில் ஒருவருமான ஜனாப் எம்.என் தஸ்லிம் உள்ளிட்டோரை கௌரவிக்கு முகமாகவும் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இரவு 07.30 மணியளவில் முதல் போட்டியாக இளம் வீரர்களை அறிமுகம் செய்யும் போட்டி ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகமும் வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதினர்.


இப் போட்டி வெற்றி தோல்வி அற்ற நிலையில் முடிவுபெற்றது இதனைத் தொடர்ந்து பிரதான போட்டி நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்து லீக் 'பீ' பிரிவு அணியான ஓட்டமாவடி யங்சோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகமும் மட்டக்களப்பு மாவட்ட 'ஏ' பிரிவு அணியினரான டிஸ்கோ விளையாட்டுக் கழகமும் மோதினர் இதில் 3 – 0 எனும் கோல் கணக்கில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டது.

ஹஜ்ஜூப் பொருநாளை முன்னிட்டு இப்போட்டி நடைபெற்றதால் பொருந்திரளான உதைப்பந்து ரசிகர்கள் போட்டியினை கான்பதற்கு வருகைதந்திருந்தனர் எனபது இதன் சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னால் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ் அமீர் அலி ,கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பீ.எஸ் ஹமீட் பிரதேச சபை உறுப்பினார்களான ஐ.ரீ அஸ்மி மற்றும் எம்.எம். அஹமட்;, கல்குடா உதைப்பந்து லீக் தலைவரும் கழகத்தின் போசகருமான எஸ்.எம் தௌபீக் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்து சங்கத் தலைவர் திரு எஸ். உதயராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட நடுவர்கள் சங்கத் தலைவர் திரு. சோபர்ஸ்; ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :