நாவிதன்வெளி,மத்தியமுகாம்-01க்கு புதிய பொது மைதானம் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

 எம்.ஐ.பிர்னாஸ்,யு.எல்.ஹம்மாத்-

ம்பாறை ,நாவிதன்வெளி,மத்தியமுகாம்-01 ஆம் கிராமம் உருவாகி 60 வருடங்களின் பின் புதிய பொது மைதானம் அமைக்கும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் செய்யும் வைபவம் மத்தியமுகாம் 01 ஆம் பிரிவிற்கான கிராம உத்தியோகத்தர் கே.மதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகத்தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்து வைத்தார்.

இம் மைதானம் அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் சுமார் 44 இலட்சம் ரூபா முன்மொழியப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 4 இலட்சம் ரூபா அவரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் மைதானம் அமைக்கப்படவுள்ளது.

கிராமம் உருவாகி 60 வருடங்களின் பின் பியசேன பாராளுமன்ற உறுப்பினரால் இம் மைதானம் அமைக்கப்படுவதையிட்டு இப்பிரதேச இளைஞர்கள் பராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்ததோடு பியசேன பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கவுள்ளதாக இதன் போதுஇளைஞர்கள் தெரிவித்தனர்.

இவ் வைபவத்தில் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ.ஆனந்தன்,தொழில் நுட்ப உத்தியோகத்தர் சிவராமன்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ் உட்பட பெருந்திரளான பொதுமக்கள்,விளையாட்டு வீரா்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :