ஜெமீல் MPC கலந்து கொண்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தலைவர் தின நிகழ்வு





அஸ்லம் எஸ்.மௌலானா-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பற்றிய நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லூரி முற்றத்தில் அதிதிகளினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நினைவாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் கல்முனைத் தொகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முப்பது நிகழ்வுகளுள் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :