தேசிய காங்கிரஸின் மர்ஹூம் அஷ்ரப் தின நிகழ்வு பாலமுனையில் -படங்கள்




பி. முஹாஜிரீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரபின் 14 வது ஞாபகார்த்த தினத்தையொட்டி தேசிய காங்கிரஸ் கட்சி எற்பாடு செய்த நினைவேந்தல் வைபவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் கே.எல். உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றினார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், எம்.எல்.ஏ. அமீர் ஆகியோர் உட்பட உலமாக்களும் அரசியல் பிரமுகர்களும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :