பி. முஹாஜிரீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாப தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் யின் 14வது ஞாபகார்த்த தினத்தையொட்டி தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப்பேருரையும், பாலமுனை பிரதேசத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் ரூபா. 140 மில்லியன் நிதியிலான பல அபிவிருத்தி திட்டங்களும் இன்று (16) செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையின் அழைப்பின்பேரில் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை வைபவ ரீதியாக அங்குரார்பணம் செய்து வைத்தார்.
ரூபா 40 மில்லயன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹுசைனியா நகர் வீதி, ரூபா 04 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஏரிக்கரை வீதி, ரூபா 30 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அரசயடி வீதி, ரூபா 35 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சின்னப்பாலமுனை காபட் வீதி என்பன மக்களின் பாவணைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாலமுனை ஹிரா நகர் மீள் குடியேற்ற வீட்டுத் திட்;டத்திற்கான மின் இணைப்பு வழங்கல், வீட்டுத்திட்டம் என்பன வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment