இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த தலைவரின் நினைவு நாள் நிகழ்வு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலமையில் லொயிட்ஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் உரை நிகழ்த்தினார்.
அவரின் உரையில் குறிப்பிட்டதாவது:..
தலைவர் அஷ்ரப் அவர்களுக்காக இந்நாளில் அவரின் வளிகாட்டலில் அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் அவரின் அபிமானிகள், நன்றியுடையவர்கள், போராளிகள் அவருக்காக இன்று விஷேடமாக துஆ பிரார்தனை செய்து வருகின்றமையை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கடந்த 13 வருடங்கள் கண்கெட்டவர்கள் போல் இருந்தவர்கள் திடீரென்று இன்று பாலமுனையில் மாபெரும் அபிவிருத்தி தலைவரின் நினைவு நாளில் என்ற தலைப்புடன் செய்யும் அநியாயம், நயவஞ்சகம் சகிக்க முடியாமல் இருக்கிறது. அரசியல் செய்வது என்றால் இம்முறையை விட்டால் இவர்களுக்கு வேறென்ன தெரியப்போகிறது.
கடந்த 2 முறை திறக்கப்பட்ட வீதிகள் இன்று மூன்றாவது முறை திறக்கப்படுகிறது, ஒரே வீதி மூன்று முறைகள் திறப்பது இவர்களின் அரசியலில்தான் சாத்தியமாகிறது. ஏன் என்றால் கேட்கிறவன் கேணயன் என்றால் CTB பஸ்ஸில் அமெரிக்கா போய் வந்திருக்கிறோம், என்றும் கூறுவார்கள்.
வெட்கம் கெட்ட அரசியல் செய்து பிளப்பு நடத்தும் இவர்கள் இப்பெரும் தலைவரின் பெயரைப்பாவித்து செய்வது வேதனையும் வெட்கமுமாக இருக்கிறது. பல இடங்களில் பாடசாலைக் கட்டிடங்கள் கட்டியவர்கள் இப்பெரும்தலைவரின் பெயரை சூட்ட விரும்பவில்லை தனது பெயரையும் தன் தாயின் பெயரையும் தன் தகப்பனின் பெயரையும் சூட்டி அழகு பார்க்கும் இவர்கள் மக்களின் பொது நலமாக சிந்திப்பவர்கள் என்று கூறுவது எப்பெரிய முட்டாள்தனமானது என்பது புரிகிறது.
இன்று பாலமுனையில் இடம்பெறும் நிகழ்வுக்கான இடம் அதாஉல்லா மண்டபம் ஏன் அந்த கட்டிடத்தைக் கட்டியபோது இந்த தலைவரின் பெயரை சூட்ட முடியாமல் போனது. எல்லாமே சுயநலம் கடந்த 13 வருடங்கள் வராத நினைவு இன்று வந்துள்ளது என்றால் தேர்தல் ஒன்று விரைவில் சந்திக்க இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.
இன்று முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயே வெட்டுக் குத்துக்கள், பதவிமோகங்கள் என்று அலைந்து திரிவது சமூகத்துக்கான துரோகமாகவே இருக்கிறது.
மரைந்த தலைவர் முஸ்லீம் சமூகத்தின் விடிவுக்காக அவர்கண்ட கனவு அம்பாரை மாவட்ட கரையோர அலகு இதனை சமூகத்துக்காகப் பெற்ருக்கொடுக்க பெரும் கஷ்டப்பட்டார் ஆனால் அதனை நிறைவு செய்வதற்கு முன்னர் மரணித்து விட்டார். உண்மையான கட்சி தொண்டர்கள் என்றால் அந்த தலைவரின் அபிலாசையை இன்று நிறைவேற்றி இருக்க வேண்டும் மாறாக அம்பாரை மாவட்டத்துக்கு கரையோர கச்சேரி தேவையில்லை என்று கும்மாளம் போட்ட ஒருவர் இன்று தாந்தோன்றித்தனமாக அமைச்சுப்பதவியைப்பெற்றுக்கொண்டு ஏராவூரில் தலைவருக்கு நினைவு நாள் அனுஷ்டிக்கிறாராம் என்னும் செய்தி கேட்கும் போது ஏமாற்றம் எந்தளவு உயர்ந்து செல்கிறது இப்படியானவர்களின் வாழ்கையில் என்று புலனாகிறது.
ஒவ்வொருவரும் தலைவராகவேண்டும் ஒவ்வொருவருக்கும் பதவி கிடைக்கவேண்டும் மற்றவர்களை மிதித்துக்கொண்டு முன்னே செல்ல வேண்டும் என்ற எண்ணம் முடையவர்கள் மிகவிரைவில் அளிந்து விடுவார்கள் அவர்களின் பட்டம் பதவிகள் எல்லாம் செல்லாக்காசிகளாகி விடும் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment