பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரிக்கு கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமட் உதவிதொகை கையளிப்பு




துளை மாவட்டத்திற்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான நசீர் அஹமட் அவர்களிடம், அப்பிரதேசத்தின் சமூக நலன்விரும்பி அஸீம்தீன் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க மல்வத்தை பதுளைப்பிட்டியில் அமைந்துள்ள பஹ்மியா அரபிக்கல்லூரிக்கு கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு கல்வி பயிலும் மாணவர்களை சந்தித்து அம்மாணவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்.

இதன் போது அம் மாணவர்கள் தாங்கள் பல்வேறுபட்ட இடங்களில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் தமது தங்குமிட குறைபாடுகளையும் கூறியதையடுத்து அமைச்சர் உடனடியாக தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ரூபாய் ஒரு இலட்சம் உதவித் தொகையாக மாணவர்களிடம் கையளித்தார்.

அமைச்சரின் ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :