வெலிமடவிலள்ள வெலிமட மத்திய கல்லூரியில் மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் (செப். 14) திறந்துவைத்தார்.
உயர்கல்விப் பாடசாலைகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் உருவாக்கப்படுமென "மஹிந்த சிந்தனை - எதிர்காலத்திற்கான தொலைநோக்கு" தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் மஹிந்தோதய தொழிநுட்பட ஆய்வுகூடம் ஒவ்வொன்றும் 40 கணினிகளுடன் கூடிய கணினிக்கூடம், 20 கணினிகளுடன் கூடிய மொழிக்கூடம், தொலைக்கல்விக்கான நெனச நிலையம், கணித ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
(Photos by: Nishanka de Silva)
(Photos by: Nishanka de Silva)




0 comments :
Post a Comment