த.நவோஜ்-
சுகாதார அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினூடாக 'டெங்கு இல்லாத இலங்கை' என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடார்த்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசும் பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்; நடைபெற்றது.
டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சித்திரங்களைத் திறமையாக வரைந்து அதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப்பரிசும் பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாமிடத்தைப் பெற்ற மாணவனுக்கு 5000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும், இரண்டாமிடம் மாணவனுக்கு 3000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும், மூன்றாமிடத்தைப் பெற்ற மாணவனுக்கு 2000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.மேலும் 5 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்புப் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் கே.தர்ஷினி, மாவட்ட மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தேவராஜன், செங்கலடி மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.கிருஸ்ணபிள்ளை, சுகாதாரக் கல்வி அதிகாரி உட்பட சுகாதார அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment