பொத்துவில் பிரதேசத்தில் காணாமல் போன மோட்டார் பைசிக்கள் இன்று அதிகாலை கண்டு பிடிப்பு

பொத்துவில் தாஜகான்-

பொத்துவில் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன மோட்டார் பைசிக்கள் பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்சன்ஸ் காட்வெயார் முன்னிலையில் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் பைசிக்களின் உரிமையாளர் ஏ.அப்துல் றஊப் மௌலவியாவார் பொத்துவில் பிரதேசத்தின் மண்மலைப்பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் வைத்து 06 மாதம் 20 ம் திகதி திருடப்பட்ட இச் சைக்கிள் சுப்பர் ஸ்பிலன்டர் BAT-2291 இலக்கத்தையுடையதாகும். 
இன்று காலை 14ஆம் திகதி பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்சன்ஸ் காட்வெயார் முன்னிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மோட்டார் பைசிக்கள் மண்ணில் புதைக்கப்பட்ட அடையாளம் தென்படுகின்றது. உப்புத்தன்மையும் ஆங்காங்கே தென்படுகின்றது.குறித்த மௌலவியின் பைசிக்கள் களவாடப்பட்டு புதைக்கப்பட்டது மற்றும் கொண்டு வந்து பிரதான சந்தியில் வைக்கப்பட்டது ஏன் என்பது மர்மமாக உள்ளது.

குறித்த பைசிக்கள் மூடப்பட்ட நிலையில் பொத்துவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காவலில் உள்ளனர்.அம்பாறை குற்றப் புலனாய்வு பொலிஸ் மோப்ப நாய் வந்து சோதனையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :