வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரை





த.நவோஜ்-

ட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வருடா வருடம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்த ஆன்மீக பாதயாத்திரையானது சனிக்கிழமை இரவு ஆலயத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது யாத்திரையானது சனிக்கிழமை இரவு வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

ஐந்து நாட்களைக் கொண்ட ஆன்மீக பாத யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன், ந.புவனசுந்தரம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டு நந்திக் கொடிகளை ஏந்தியவாறும், அரோகரா என்ற நாமத்தை உச்சரித்தும், பஜனைகள் நடாத்தியும், தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் முகமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன் ஆகியோர் சமய நற்சிந்தனை வழங்கினர்.

இதன்போது ஐந்து நாட்கள் யாத்திரையை மேற்கொண்ட பக்தர்களுக்கு உணவு, சிற்றூண்டி, குளிர்பானம், தேனீர், தண்ணீர், மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தந்த மாவட்டத்திலுள்ள ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :