மின்சாரம் 68 அலகிற்கு ஒன்றரை இலட்சம் வந்ததால் வீட்டு உரிமையாளருக்கு மாரடபைப்பு-வீடியோ



று மின்குமிழ்களை மாத்திரம் பயன்படுத்தும் வீடொன்றுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா, மின் கட்டணமாக வந்துள்ள சம்பவம் ஒன்று பத்தேகமையில் பதிவாகியுள்ளது.

பத்தேகம, அகுரட்டிய – உடகம பிரதேசத்தில் உள்ள இந்த வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் வாழ்கின்றனர்.

வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக்கொண்ட நாள் முதல் சுமார் 500 ரூபா மாத்திரமே மின் கட்டணமாக வந்துள்ளது.

இதனடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் 68 மின் அலகிற்கான கட்டணமாக 842 ரூபா 40 சதம் காணப்பட்டுள்ளது.

ஆனால் செலுத்த வேண்டிய முழுத் தொகையாக 1,46,561 ரூபா 78 சதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும் அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்தேகம பிரதேச மின் பொறியியலாளர் சிறில் கருணாரட்ன நியூஸ்பெஸ்டிற்கு தெரிவித்தார்.

அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால் குறித்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: News1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :