அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்பாளர் உட்பட 2 GS ,1 SDO விளக்க மறியலில்

பொத்துவில் தாஜஹான்-

பொத்துவில் பிறைந்துரைக்கண்டம் வன்னியனார் வாய்க்கால் புதிய விவசாயக்குழு நிருவாகத் தெரிவின் போது குழப்பம் விளைவித்து அரச கடமைக்கு பங்கம் விளைவித்தார்கள்  என்ற சந்தேகத்தின் பெயரில்   5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட குழப்பத்தால் கிராம உத்தியோகத்தர் அலீப்கான், அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் றஹீம் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,

அரச கடமைக்கு குந்தகம் விளைவித்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.பதுர்கான், சமுர்தி உத்தியோகத்தர் பஸ்மீ‌‌ர், பக்குர்தீன், மற்றும் கிராம உத்தியோகத்தர் றாபி,ஹபீல்ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :