செப்படம்பர் 16, இது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூரியனாய் பிரகாசித்து திடீரென ஒரு மாலைப்பொழுதில் நிரந்தரமாய் மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இறையடியெய்திய தினம்.
வரலாற்றுச் சரித்திரம்
வாழ்வின் நெருக்குதல்களும்
மனித அவலங்களும்
தலை விரித்தாடிய பொழுதுகளில்
எதேர்ச்சையாக
கீழ் வானத்து வானவில்லாய் முளைத்த
அஷ்ரப் எனும் ஒளிச்சுடர்
பலநு◌ாறு யுகங்களின் இருள்களைக்
குத்திக் குடையும் வல்லமையுள்ளது
முஸ்லிம் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவும்
அரசியல் சமூகவியலில்
புது வீச்சம் காணவும்
அஷ்ர.ப் ஆற்றிய பணிகளக்குப் பிறகு
இன்னும் இடைவெளிகள்தான்
கனத்துக் கிடக்கின்றன....
இன. மதக் குரோதங்களுக்கப்பால்
நமது இருப்பும் ஜிவிதமும் மேலோங்க
நமக்காகவே உழைத்தவர் அவர்!
நம் யுகம் சந்தித்த
மிகப்பெரும் அதிசயம் அஷ்ரப்!
அவரது வாழ்வும் பணியும்
முகர்ந்து விட்டு து◌ாக்கியெறியும்
மலரைப் போன்றதல்ல
அது
சாமர்த்தியங்களும் சாதனைகளும் நிறைந்த
மிகக் கனதியான வரலாற்றுச் சரித்திரம்!
சமுதாயத்திற்காகவே
ஆயுளை அர்ப்பணித்த அவர்
சுவனத்து நறுமணங்களில் குதூகலிக்கட்டும்
இந்த அவலங்களைச் செவிமடுக்காது
தன் காதுகளை மூடியபடி....
ஆனால்
தளபதியே அஷ்ரப்
நீ மரணித்துவிட்டாய் உன்னைத்தவிர!
- பாலமுனை முஹா

0 comments :
Post a Comment