ஐ.எஸ்.ஐ.எஸ். பனியன் விவகாரம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த பள்ளிவாசல் இமாமை போலீசார் கைது செய்தனர்.பேஸ்புக் பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முத்திரை பதித்த பனியன் அணிந்து இளைஞர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் பேஸ்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 4–ந்தேதி தொண்டி காதர்முகைதீன் தெருவை சேர்ந்தஅப்துல் ரகுமான் (வயது 24), வடக்குதெருவை சேர்ந்த முகம்மது ரில்வான் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்துல்ரகுமான், முகம்மது ரில்வான் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ். முத்திரையை வடிவமைத்து அதனை பனியன்களில் அச்சிட்டுத் தரக்கோரி திருப்பூர் தனக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் இமாம் பைசுல் ரகுமான் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.கைது
அவர் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு சென்று 100 பனியன்கள் தயாரித்து வாங்கி உள்ளார். இவற்றில் 27 பனியன்கள் பயன்படுத்தபட்டு உள்ளன.
இதைத்தெடர்ந்து தனிப்பிரிவு போலீசார் திருப்பூர் சென்று பைசுல் ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அச்சிடப்பட்டவற்றில் பயன்படுத்தப்பட்டவை தவிர மீதம் உள்ள பனியன்கள் எங்கே உள்ளன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment