பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தும் சட்ட அதிகாரம் எவருக்கும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் ஒழுக்க விதிகளுக்கு முரணான வகையில் செயற்பட்டால் அவரை மாநாயக்க தேரர்கள் கட்டுப்படுத்த முடியும் எனவும், அவ்வாறு மாநாயக்க தேரர்களின் அறிவுரையை பௌத்த பிக்கு செவிசாய்க்கத் தவறினால் செய்வதற்கு எதுவுமில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
எனினும் ஒரு சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பௌத்த பிக்கு சமூதாயத்தையுமே பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்று காலம் முதல் தேசத்தின் சுய மரியாதையை உறுதி செய்ய பௌத்த பிக்குகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு பௌத்த பிக்குகள் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment