ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நிறைவடையும் வரையும் மஹியங்கனை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடி பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபதி காமினி நவரத்ன தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தெனுக வித்தானகே மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்ட குழுவினர் மஹிங்கனை பகுதியில் வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
MD
0 comments :
Post a Comment