தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்காக பேசுகின்றபோது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? என கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திடம் கேட்க விரும்புவதாக தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை விடுத்துள்ள அறிக்கையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழர் பற்றி கதைக்க அமைச்சர் அதாஉல்லாவுக்கு அருகதை இல்லை என கல்முனை மாநகர எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அண்மையில் விடுத்துள்ள ஊடக அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் உரையாற்றுகையில் ஒரு காலத்தில் தமிழர்களும்,முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்குயிராக நேசித்து உறவு கொண்டாடி பரஸ்பர நன்மை தீமைகளில் பங்குகொண்டு வாழ்ந்தார்களோ அதே உயிரோட்டமான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவேதான் கிழக்கு மாகாணம் தனியாக பிரிவதற்கு குரல் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பேசுவதற்கு அமைச்சர் அதாஉல்லாவிற்கு அருகதை இல்லையெனவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகபூமி, அதில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களின் எந்த நலன் பற்றியும் கதைப்பதற்கு அமைச்சர் அதாஉல்லா யார் எனவும் அமிர்தலிங்கம் ஊடகங்கள் வாயிலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் வாழும் சகல மக்களின் பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது.
வடகிழக்கு என்று ஒரு அரசியல் அமைப்புக்குள்ளாக இருந்த ஒரு அபிவிருத்தியை வடக்கு, கிழக்கு என்று இரண்டு அபிவிருத்திகளாக மாற்றியது மட்டுமல்ல, இந்த நாட்டில் இரண்டு தமிழ் பேசும் மாகாணசபைகளை உருவாக்க குரல் கொடுத்த பெருமைக்குரியவர் அமைச்சர் அதாஉல்லா என்பதை நமது நாடே அறிந்த விடயமாகும்.

அஹிம்சை போராட்டம், ஆயுதப் போராட்டம் இந்த இரண்டு போராட்டங்களினதும் வலியினால் நொந்து வெந்து போன தமிழ் சமூகம் இன்று ஜனநாயக நீரோட்ட போராட்டத்தில் குதித்து அதன் மூலம் சமூக மாற்றமொன்றை கொண்டுவர முனைப்புக் கொண்டு முன்னேறி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் இன உறவை கட்டி எழுப்பும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்னும் இன்னும் மக்களுக்கு உணர்ச்சி பலூன்களை ஊதி வெடிக்க விடாமல் அரசியல் நீரோட்டத்துக்கு தாமும் தயாராகி, மக்களையும் தயார் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ள நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவுகளின் வரலாற்று ஆழம் தெரியாமலும், இரு சமூகங்களின் ஒற்றுமையை விரும்பாமலும் இரு சமூகங்களுக்கிடையேயும் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற கசப்பான நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்தும் அவற்றை பிற்காலசந்ததிகளுக்கு ஞாபகமூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அமிர்தலி;ங்கத்தின் மனப்பாங்கை அவரின் அறிக்கை குறிகாட்டுகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம்கள் ஒரு மொழி பேசுகின்ற சமூகம் என்ற ரீதியில் ஒற்றுமையாகவே வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்ந்தும் இருக்கிறார்கள் வாழ்ந்தும்; வருகிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஒரே மொழி பேசும் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பது அமிர்தலிங்கம் போன்றோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், தமிழ் மக்கள் தாக்கப்பட்ட போதும், தமிழ் மக்கள் பாதுகாப்பு தேடி வந்தபோதும் முஸ்லிம்; மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். உதவிக் கரம் நீட்டி இருக்கிறார்கள். 1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது தமிழ் மக்கள் பலரை முஸ்லிம் மக்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள். இது போன்று தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களை காப்பாற்றி உள்ளனர்.
இவையெல்லாம் வரலாற்று உண்மைகளாகும்.
உண்மையை மறைத்து, தமிழ் மக்கள் துன்புறும்போது முஸ்லிம்களும,; முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்த்துக்கொண்ருந்தார்கள் என்ற தொனியில் தற்கால மற்றும் எதிர்கால தமிழ் சந்ததியினருக்கு முஸ்லிம்கள் தொடர்பான வெறுப்புணர்வை ஊட்டக் கூடிய வகையில் அபாண்டமான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துபவர்கள் இதற்குப் பின்னராவது தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்து, தமிழ் தரப்பினரது அரசியல் போரட்டங்களில் பங்குகொண்ட முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்குழுக்களினால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டு, தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திசைதிருப்பப்பட்டது, இரவோடு இரவாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது பல தாக்குதல் தொடர்ந்து கொண்டிருந்தன. இதனால்தான் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். கிழக்கிலாவது முஸ்லிம்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கருத்தும் அதற்கான அழுத்தங்களும் மேலோங்கின.
வடக்குக் கிழக்கில் வாழ்ந்த சமூகங்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல் இணைக்கப்பட்ட வடகிழக்கிருந்து கிழக்கை பிரிப்பதில்தான் தங்கியுள்ளது என்று உணர்ந்தபோதுதான், கிழக்கைப் பிரிப்பதற்கான வேண்டுதலை அமைச்சர் அதாஉல்லா முன்வைத்தாரே தவிர, தமிழ் மக்களின் நலன்களைப் பாதிப்படையச் செய்ய வேண்டுமென்றோ அல்லது வேறு அரசியல் காரணங்களின் பின்னணிக்காகவே செய்யவில்லை என்பதை அமிர்தலிங்கம் உணர வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போது கிடைத்த அநுகூலங்கள் என்ன என்பதும் கிழக்கும் வடக்கும் பிரிந்திருப்பதனால் கிடைத்துள்ள நன்மைகள் எவை என்பதையும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அதனை அவர்களால் வெளிப்படையாகச் சொல்லமுடியாவி;ட்டாலும் அவர்களின் மனட்சாட்சி யதார்த்தத்தை உணர்த்திக் கொண்டிருக்கும்.
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று அமிர்தலிங்கம் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை ஏமாற்றுவதற்காக பத்திரிகைகளில் அறிக்கை விடும் அரசியலுக்கு அப்பால், எதை எந்த நேரத்தில் செய்தால் பயனளிக்குமோ அதை அந்த நேரத்தில் செய்யும் யதார்த்தமான தலைவராகவே அமைச்சர் அதாஉல்லா செயற்படுகிறாறே தவிர, அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்றும் ஏமாற்று அரசியலை அவர்புரியவில்லை என்பதை; புரிந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் முஸ்லிம்களினதும் தாயகப் பூமியாகும் என்பதை சிலர் மறந்து இன ரீதியான அறிக்கைகளை வெளியீட்டு வரலாற்றை மறந்தவர்களாக செயல்படுகின்றனர்.
பழைய பல்லவிகளைப் பாடிப்பாடி தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரித்தாலும் கைங்கரியத்தை விட்டுவிட்டு இன்று சிறுபான்மை சமூகத்தை இந்த நாட்டிலிருந்து துரத்த வேண்டும் என்றும் இது பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்றும் பொதுபலசேனா, ஹெலஉறுமய போன்ற இனவாத இயக்கங்கள் இனவாத உணர்வுகளை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஊட்டி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டி வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமான பூமி என்ற கருத்தினை விதைத்து முஸ்லிம், தமிழ் சமூகங்களின் உறவுளில் விரிசல்களையும் காயங்களையும் ஏற்படுத்தி வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.என மேலும் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

0 comments :
Post a Comment