சக பயணி ஒருவரை காப்பாற்றுவதற்காக பயணிகள் பலர் ஒன்றிணைந்து ரயில் ஒன்றை நகர்த்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் இருந்து இறங்கும் பயணி ஒருவரின் கால் ரயில் மற்றும் ரயில்மேடைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிக்கிக்கொண்டது.
இந்நிலையில் அவரால் காலை வெளியில் எடுக்க முடியாமல்போக, அங்கிருந்த பயணிகள் துரிதமாக செயற்பட்டு ரயிலை நகர்த்தி அவரை காப்பாற்றியுள்ளனர். 10,000 தொன் நிறையுடைய ரயிலை நகர்த்தியமை தனக்கு ஆச்சரியமளிப்பதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நி.



0 comments :
Post a Comment