ஈராக்கிலுள்ள யாஸிதி சிறுப்பான்மை இனத்தவர்கள் 500 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கொன்றுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட சிலரை கிளர்ச்சியாளர்கள் உயிருடன் புதைத்துள்ளதாக ஈராக்கின் மனித உரிமைகள் அமைச்சர் மொஹமட் சியா அல் சூடானி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட 300 பெண்கள் அடிமைகளாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சின்ஜார் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட யாஸிதி இனத்தவர்களை கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஈராக் மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாஸிதி இனத்தவர்கள் பாராம்பரியமாக வாழ்த்துவரும் சின்ஜார் மாகாணத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். யாஸிதி இனத்தவர்களை சாத்தான் வழிபாட்டாளர்கள் என ஏனைய குழுக்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது. n1st
.jpg)
0 comments :
Post a Comment