ஆறு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் 16 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 329 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 193 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ ,நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வரட்சியினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து இடர் முகாமைத்துவத்தின் அதிகாரிகள் முரணான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இதன்படி, வரட்சியினால் 10இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார். எனினும், வரட்சியினால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரட்சி நிவாரணத்தை வழங்குவதற்காகஇரண்டாயிரம்மில்லியன்ரூபாநிதிஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாட்டில் நிலவும் வானிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.n1st

0 comments :
Post a Comment