த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் கோப்பாவெளி, வெலிக்காகண்டி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தால் பாடசாலை உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
சேவகம் நிறுவனத்தின் மாணவர்களுக்கு கைகொடுப்போம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வெலிக்காகண்டி விபுலானந்தர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகள், தண்ணீர் போத்தல், கலர் பெட்டி எனப் பல பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன், சேகவம் நிறுவனத்தின் தலைவர் எஸ்.நிலாந்தன், சேகவம் நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.நித்தியானந்தன், கோப்பாவெளி, வெலிக்காகண்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், கோப்பாவெளி கிராம சேவகர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
லண்டன் கிறிஸ்தவ தேவாலயத்தின் உதவியில் நடைபெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததுடன், உதவிகளை வழங்கிய சேவகம் நிறுவனம் மற்றும் லண்டன் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தினருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment